Saturday, January 25, 2025
HomeLatest Newsவசந்த முதலிகேவின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த தேரர்!

வசந்த முதலிகேவின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த தேரர்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை உடன் விடுதலை செய்யா விட்டால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என தேரரொருவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மக்கள் சுமை காரணமாக அரகல போராட்டாம் ஆரம்பமானத்தை தொடர்ந்து பலர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் இவர்களில் சிறிதம்ம தேரரும் அடங்குவர் அவர் தற்போது நாரயன்பிட்டி பகுதியில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் டெங்கு அறிகுறி காணப்படுவதாகவும் அதற்கன பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் பிணை இரண்டு தடவைகளுக்கு , மேல் மறுக்கப்பட்டு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது தெரிவிக்கபடுகிறது.

அவரின் சகோதரிக்கு மட்டும் பார்வையிட அனுமதி கிடைக்கின்றது என போராட்ட ஏற்பாட்டு குழுவில் ஒருவரும் பல்கலை கழக மாணவருமாகிய தேரர் குணரத்ன மருதானை சி.எஸ்.ஆர் சமூக நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


ரணில் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல்கலைகழக மாணவர்களை கைது செய்து சிறையில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

எமது மாணவர்களுக்கு மருத்துவ வசதிகளை கூட செய்யவில்லை எம்மையும் பார்வையிட அனுமதிப்ப பதில்லை இதனுடாக ரணில் ராஜாபாக்க்ஷ எம்மை சீண்டி பார்க்கிறார். இதற்கு ஒரு போதும் நாம் அஞ்சப்போவதில்லை. எமது போராட்டம் ஓயாது நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வோம்.


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் எமது நண்பர்கள் கைது செய்வதற்கு அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டை பொருளாதார திருடர்களிடம் இருந்து மீட்டெடுபதற்கு போராடியவர்கள்.
அவர்களை எப்படி கைது செய்வார்கள்? யார் சொல்லிக்கொடுத்து எந்த சட்டத்தில் இடம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

ரணில் ராஜபக்க்ஷ அரசின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சபோவதில்லை வசந்த முதலிகே, சிறிதம்ம, இவர்களோடு இன்னும் தடுத்து வைக்கப்பாட்டுள்ளவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும் என ரணில் அரசாங்கத்திக்கு வேண்டுகோள் விடுகின்றோம். இல்லையேல் விளைவுகள் பாராதூரமானதாக அமையும் என தேரர் அரசாங்கத்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recent News