Monday, January 27, 2025
HomeLatest Newsதிடீரென ஓநாயாக உருமாறிய இளைஞன்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

திடீரென ஓநாயாக உருமாறிய இளைஞன்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் 18 லட்சம் செலவு செய்து “ஓநாய்” போல உருமாறியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. அவர் ஓநாயாக உருமாற முடிவு செய்தார். ஏனென்றால் விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார்.

இதனால் நாமும் அதுபோல ஒருநாள் வேடமிட்டால் என்ன என யோசித்தார். இதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார். அவர் ஆடை அலங்கார நிபுணரை அணுகி தன்னுடைய ஆசையை தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட ஆடை அலங்கார நிபுணரும் சரி என ஒப்புக்கொண்டார். இருப்பினும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிறைய செலவு ஆகும் என ஆடை வடிவமைப்பாளர் கூறினார். அதற்கும் அந்த இளைஞர் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த வாலிபரை ஓநாயாக உருமாற்றுவதற்கான வேலைகள் தொடங்கியது. இதற்காக அவர் பல முறை உடையை அளவெடுப்பதற்காக நிறுவனத்துக்கு சென்று வந்தார்.

50 நாட்களில் அந்த வாலிபர் அச்சு அசல் ஓநாய் போல உருமாறினார். பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோல சிறிது தூரம் நடந்தார். இதை பார்த்து அனைவரும் அசந்துபோனார்கள்.

திடீரென யாரும் பார்த்தால் அது ஒநாய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது கெட்-அப் கச்சிதமாக இருந்தது. இதற்காக அந்த வாலிபர் இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் ரூபாய் செலவு செய்து இருந்தார்.

அது அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. தனது கனவு நனவாகி விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

சிறு வயது முதல் விலங்குகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டி.வியில் யாராவது அது போன்று நடித்தால் விரும்பி பார்ப்பேன். நாமும் இது போன்று முயற்சி செய்தால் என்ன என்று நினைத்தேன்.

இதற்காக ஓநாய் போன்று வேடமணிய முடிவு செய்தேன். அதற்கு ஏற்றாற்போல நான் சென்ற நிறுவனமும் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்து ஆடைகளை தயார் செய்து கொடுத்தனர். அதை எனது உடலில் மாட்டிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றேன்.

எனது உருவத்தை பார்த்து என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. உண்மையான ஓநாய் போன்று இருந்தது. இதனால் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது.

பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோன்று சிரமப்பட்டு நடந்தேன். ஆனாலும் எனது ஆசை நிறைவேறியதால் அந்த வலி எனக்கு பெரிதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதே நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்பு டேக்கோ என்பவர் ரூ.12 லட்சம் செலவில் நாய் போல வேடமணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News