Monday, December 23, 2024
HomeLatest Newsபோதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம்

போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளைஞன் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு சென்ற இவர் உணவு உட்கொள்ளாது வேறு சில இளைஞர்களுடன் சென்றுள்ளார்.

பின்னர் இவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து விட்டு அங்குள்ள மரக்குற்றி ஒன்றில் அமர்ந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணியளவில் அவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில், அங்குள்ளவர்கள் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம் அதிகளவான போதைப்பொருளை உடலில் ஏற்றியமையே என உடற்கூற்றுப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News