Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் அதிரும் X தளம்..!

அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் அதிரும் X தளம்..!

அண்மைய நாட்களாக எலான் மஸ்க்கின் ட்விட்டர் தளம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது.

பிரபல தொழில் அதிபரான எலான் மஸ்க் கடந்த ஒக்டோபர் மாதம் டிவிட்டர் தளத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றார்.
அந்த வகையில் ஜூலை பிற்பகுதியில் ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டு “எக்ஸ் ” சமூக வலைத்தளமாக் மாறியது.

தற்போது எக்ஸ் தளமானது கைரேகைகள் உள்பட பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது. ஆனால் ஆகஸ்டு மாதம் இறுதிவரை எக்ஸ் சமூக வலைதளம் பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் கேட்டது இல்லை.


இந்த நிலையில், தற்போது பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு, மற்றும் அடையாள நோக்கங்களுக்காக பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்து உள்ளார். அத்தோடு இது முற்றிலும் பயனரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் அவர் கூறி உள்ளார்.

Recent News