நவம்பர் 15ஆம் தேதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இது 2030ல் 8.5 பில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதால் இறப்பு விகிதம் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் ஆயுட்காலம் 9 வருடங்கள் அதிகரித்து 72.8 வருடங்கள் என்று அது கூறியுள்ளது.
எதிர்காலத்தில், இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, 2050ல் சராசரி ஆயுட்காலம் 77.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950க்குப் பிறகு முதல் முறையாக 2020ல் உலக வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும், 2080ல் உலக மக்கள் தொகை 10.4 பில்லியனாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.