Friday, November 15, 2024
HomeLatest NewsWorld Newsஉலகிலேயே மிகப்பெரிய ராட்ச்சத கண்ணாடி - மாதக்கணக்காக இருளில் முடங்கும் கிராமம்

உலகிலேயே மிகப்பெரிய ராட்ச்சத கண்ணாடி – மாதக்கணக்காக இருளில் முடங்கும் கிராமம்

சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள ஆன்ட்ரோனா பள்ளத்தாக்கின் ஆழமான அடிப்பகுதியில் அமைந்துள்ள சிறிய இத்தாலிய கிராமமான விகனெல்லா, குளிர்கால மாதங்களில் இருளை மட்டும் கொண்ட இடமாக காணப்படுகிறது.பல நூற்றாண்டுகளாக, விகனெல்லாவில் வசிப்பவர்கள் சூரிய ஒளி இல்லாத குளிர்காலத்தை அனுபவித்து வருகின்றனர், இங்கு ஆண்டுதோறும் நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 வரை சூரியன் செங்குத்தாக இருக்கும் மலைகளுக்குப் பின்னால் மறைந்துவிடும். இதனால் சூரியனை அவர்கள் பார்ப்பது நடவாத காரியமாக காணப்படுகிறது

இந்நிலையில் சூரிய ஒளி நீண்ட காலம் இல்லாதது கிராமவாசிகளின் மனநிலையையும் அன்றாட நடவடிக்கைகளையும் பெரிதும் பாதித்தது, நாள் முழுவதையும் இரவு நேரம் போல நிழலியே கழிப்பது அவர்களுக்கு பெரும் சிரமமாக காணப்படுகிறது.இந்த தனித்துவமான பிரச்சனைக்கான தீர்வு ஒரு பெரிய கண்ணாடிஉருவாக்கப்பட்டது , இது ஆரம்பத்தில் உள்ளூர் கட்டிடக் கலைஞரான ஜியாகோமோ பொன்சானியால் முன்மொழியப்பட்டது.

மேலும் இந்தத் திட்டம் அப்போதைய மேயர் பியர்பிரான்கோ மிடாலியால் செயலாக்கப்பட்டது,
சுமார் எட்டு மீட்டர் அகலம் மற்றும் ஐந்து மீட்டர் உயரம் கொண்ட ராட்ச்சத கண்ணாடி, 1,100 மீட்டர் உயரத்தில் மலையின் எதிர் சரிவில் நிறுவப்பட்டது.இந்த ராட்சதக் கண்ணாடி கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் நாள் முழுவதும் சூரியனின் பாதையை பின்பற்றுகிறது, இது 300 சதுர யார்டுகள் பரப்பளவு சூரிய ஒளியை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரங்களுக்கு ஒளிரச் செய்யப்படுகிறது .

Recent News