Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉலகின் முதலாவது ஓட்டுநர் இல்லாத பேருந்து..!முக்கிய நாட்டில் அடுத்த வாரம் முதல் நடைமுறையில்..!

உலகின் முதலாவது ஓட்டுநர் இல்லாத பேருந்து..!முக்கிய நாட்டில் அடுத்த வாரம் முதல் நடைமுறையில்..!

உலகில் முதல் முறையாக ஓட்டுனர் இல்லாத பேருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

அதனை இயக்க ஸ்காட்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் இயக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார்.

சோதனை ஓட்டம் முடிந்துவிட்டதாகவும் திங்கள் முதல் எடின்பரோவில் இப்பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார்.

தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை என்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முழு அளவிலான தானியங்கி பேருந்துகளுக்கு அந்நாட்டு அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

அதனால், ஒவ்வொரு பேருந்திலும் பாதுகாப்பு ஓட்டுனர் என்று ஒருவர் அந்த பேருந்து இயக்கப்படுவதை கண்காணித்துக் கொண்டிருப்பார் என்றும் பேருந்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Recent News