முன்பெல்லாம் அவ்வப்போது டைம் ட்ராவலர்கள் குறித்த செய்திகள் வெளியாகும்.
எதிர்காலம் இப்படித்தான் இருக்கும், நானே அதைப் பார்த்தே என்று கூறுவார்கள் டைம் ட்ராவலர்கள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள்.
இப்போதெல்லாம் அப்படியில்லை, புகைப்பட ஆதாரங்களுடனான தகவல்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள் டைம் ட்ராவலர்கள்.
அவ்வகையில், சமீபத்தில் ஒரு டைம் ட்ராவலர் மூன்றாம் உலகப்போர் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மூன்றாம் உலகப்போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும்?
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அணுகுண்டுத் தாக்குதலுக்குள்ளாகும் ஒரு நகரத்தின் புகைப்படமும், அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின் வெறுமையாக காணப்படும் பூமியின் புகைப்படங்களும் உள்ளன. ஆனால், அந்த படத்தில் காணப்படுவது எந்த நகரம் என அவர் கூறவில்லை!சிலர் இந்த புகைப்படங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள அதே நேரத்தில், வேறு சிலரோ, இவையெல்லாம் போலியாக உருவாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் என்கிறார்கள்.