லண்டனைச் சேர்ந்த மாணவி ஒருவர் இரவு நேரத்தில் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த மாணவிக்கு கருவுற்று இருப்பது தெரியாதாம். எதையும் தெரியாமலேயே அந்த பெண் கருவை ஒன்பது மாதங்கள் சுமந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வப்போது அவருக்கு வயிற்று வலி மட்டும் இருந்துள்ளது. இருப்பினும், மாதவிடாய் காரணமாக தனக்கு வயிற்று வலி வருவதாக அந்தப் பெண் நினைத்துக் கொண்டார்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அதிகாலை நேரத்தில் திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. முதலில் மாதவிடாய் காலம் தனக்குத் தொடங்குகிறது என்றே அந்தப் பெண் நினைத்துள்ளார். எழ முயன்ற போதும் அந்த பெண்ணால் முடியவில்லை. இதனால் கட்டிலிலேயே அவர் அப்படியே படுத்துக் கொண்டார். திடீரென வயிற்றில் எதோ ஒரு உணர்வு தோன்ற அவர் டாய்லெட்டிற்கு விரைந்துள்ளார்.
குறித்த மாணவிக்கு வயிற்று வலி கடுமையானதாக மாறவே வயிற்றில் இருந்து எதோ கிழித்துக் கொண்டு வருவதைப் போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரால் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.
இருப்பினும் உள்ளுணர்வு காரணமாக அவர் வலிகளையும் பொறுத்துக் கொண்டுள்ளார். அந்தச் சமயத்தில் திடீரென அவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதேவேளை அந்த குழந்தை அழத் தொடங்கியதும் தான் அவருக்கு என்ன என்ன நடந்தது என்று அவருக்குப் புரிந்தது. இதையடுத்து பதற்றமடைந்த அந்தப் பெண் உடனடியாக தனது நண்பருக்குக் கால் செய்து நடந்ததை விளக்கி உள்ளார். அதன் பின்னரே தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரது ஆண் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை அந்த குழந்தை 35 வார கர்ப் காலத்தில் பிறந்து உள்ளது. குழந்தை இப்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இதுவரை தற்போது தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பிறக்கும் போது சுமார் 3 கிலோ எடை உடன் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.