Thursday, January 23, 2025
HomeLatest Newsகணவனை அசாட்டாக தூக்கிச்சென்ற பெண்! வைரலாகும் காணொளி

கணவனை அசாட்டாக தூக்கிச்சென்ற பெண்! வைரலாகும் காணொளி

பாகிஸ்தானில் திருமணம் முடிந்ததும் கணவன் மனைவியை தூக்கி செல்வதற்கு பதிலாக மனைவி கணவனை தூக்கி சென்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இதுவரை உலகில் இருந்த வழக்கத்தை முதல் முறையாக இந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் மாற்றியுள்ளார்.

திருமணம் என்றால் கொண்டாட்டம் நிறைந்தது. இதில் பல நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்படும். அப்படி பாகிஸ்தானில் ஒரு புதுவிதமான நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. எப்போது திருமணம் முடிந்தாலும் மணப்பெண்ணை மணமகன் தூக்கி செல்வதும் அந்த புகைப்படம் அவர்கள் வாழ்க்கையில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இதில் வித்யாசமாக மணமகள் மணமகனை தூக்கி செல்லும் வீடியோ வைரலாக பரவிவருகிறது. இதற்கு பலர் கிழே கமெண்ட் செய்துவருகிறார்கள். இந்த வீடியோ இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

ஒவ்வொரு தாயும் தன் மகனை வேறு பெரு பெண்ணிடம் ஒப்படைக்கும்போது தன் பிள்ளையை தான் பார்த்துக்கொண்டது போல மருமகள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல இந்த மணமகனின் தாய் நிம்மதி அடைந்திருப்பார் என்று பலர் கூறுகிறார்கள்.

இன்னொருவர் அந்த பெண் மிகவும் பலசாலியானவர் என்றும் அவரிடம் இனி ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் கமெண்ட் செய்துவருகிறார்கள். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகிவருகிறது.

Recent News