Tuesday, December 24, 2024

வாசலில் குழந்தை பிரசவித்த பெண்! பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி நீக்கம்!

கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது
அதாவது , வைத்தியசாலையின் வெளியே சத்தம் கேட்டதாக பணியாளர்கள்
தெரிவித்துள்ளனர். வெளியே சென்று பார்த்த போது தாயும் சேயும் இருப்பதனைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதான நுழைவாயல் கதவு இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வேறும் நுழைவாயில் கதவு உண்டு எனவும் வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தெரியாத பெண் பிரசவ வலியில் பிரதான நுழைவாயில் கதவிற்கு அருகாமைக்கு சென்று அங்கேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.குறித்த வைத்தியசாலையில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவாத காரணத்தினால் பணி நீக்கப்பட்டுள்ளார்.எவ்வாறனெனினும் குறித்த தாயினதும் சேயினதும் உடல் ஆரோக்கியம் பற்றிய விபரங்களை வைத்தியசாலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos