Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைனுக்கு 51 டாலர் நிதியளித்த பெண் ரஷியாவில் கைது..!

உக்ரைனுக்கு 51 டாலர் நிதியளித்த பெண் ரஷியாவில் கைது..!

ரஷியா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமைப் பெற்றுள்ள க்சேனியா கரெலினா எனும் பெண்ணை தேச துரோக குற்றத்தின் கீழ் ரஷியாவின் மத்திய பதுகாப்பு அமைப்பு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கண்கள் கட்டப்பட்டு, அதிகாரிகளால் குறுகிய பாதை வழியாக அழைத்துச் செல்லப்படும் காணொளி வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ராணுவத்திற்கு நிதி திரட்டியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவரை ரஷியாவின் யெகடெர்ன்பெர்க்கில் கைது செய்துள்ளனர்.

 51.80 டாலர் நிதியை அவர் திரட்டியதாகக் ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மதிப்பில் தோராயமாக 4500 ரூபாய்.

மேலும், அமெரிக்காவில் உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்த்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷியாவில் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அவர் சமூக வலைதளங்களில் உக்ரைனுக்கு ஆதரவாக பதிவிட்டிருக்கலாம் எனவும் அதைக் குற்றமாக ரஷியா கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பிடத்தக்கது.

Recent News