Friday, January 24, 2025
HomeLatest Newsஉக்ரேனிய கொடியின் நிறத்தில் ஆடை அணிந்து போலி இரத்தத்தினை வரவழைத்த பெண்ணால் பரபரப்பு...!

உக்ரேனிய கொடியின் நிறத்தில் ஆடை அணிந்து போலி இரத்தத்தினை வரவழைத்த பெண்ணால் பரபரப்பு…!

உக்ரேனிய கொடியின் நிறத்தில் ஆடை அணிந்தபடி வருகை தந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய கொடியின் நிறத்தில் ஆடை அணிந்த பெண்ணொருவர், சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்துள்ளார்.

அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கப் ஸ்யூல் ஒன்றை வெளியே எடுத்து, தன் தலையின் மீது பிழிந்து போலி இரத்தத்தை உருவாக்கியுள்ளார்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. உடனே விரைந்த பாதுகாவலர் அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

அவரது இந்த அதிர்ச்சிகர ஆர்ப்பாட்டம் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்க செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரெஞ்சு இயக்குனரின் Acide திரைப்படத்தின் முதல் காட்சியில் ஏன் நடத்தினார் என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்னதாக, திரைப்பட விழாவில் புடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் வகையில் வித்தியாசமாக நடந்து கொண்டதும் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent News