சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் தத்ரூபமாக உருவாக்கி வெளியிட்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, 7 ஆம் நூற்றாண்டில் உயிரிழந்த ஆங்கிலோ சாக்சன் என்ற பெண்ணின் முக்கத்தையே ஆய்வாளர்கள் தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர்.
அந்த வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டளவில் அந்த பெண்ணின் எலும்புக் கூட்டை பிரிட்டன் நாட்டின் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள டிரம்பிங்டனில் தங்கம் மற்றும் கார்னெட் சிலுவையுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில், 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலோ சாக்சன் பார்ப்பதற்கு எப்படி இருப்பார் என்பதை காட்டும் படம் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இணையத்தில் வெளியாகியது.
இந்த பெண் குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் உடலில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் புரதத்தின் அளவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஜெர்மனியில் இருந்த வேளை அதிகளவில் இறைச்சி மற்றும் பால் பொருட்களைச் உண்டுள்ளார் என்றும் ட்ரம்பிங்டனுக்கு வந்த பின்னர் அவர் உட்கொண்ட இறைச்சி மற்றும் பால் பொருட்களின் அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஆங்கிலோ சாக்சனுக்கு நோய்ப் பாதிப்பு இருந்துள்ளதாகவும் ஆயினும் அவரது மரணத்திற்கான என்ன தெரிவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், சிலுவை, தங்க ஊசிகள், மெல்லிய உடைகளை அவரது உடலுக்கு அணிவித்தும் செதுக்கப்பட்ட மரப் பெட்டியிலும் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை கடந்த கால பெண்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.