Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia News22 பாம்புகளுடன் விமான நிலையம் வந்த பெண்ணால் பரபரப்பு..!

22 பாம்புகளுடன் விமான நிலையம் வந்த பெண்ணால் பரபரப்பு..!

விமான நிலையத்தில் பெண்பயணி ஒருவர் 22 பாம்புகளை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடமே இவ்வாறு 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அப்பொழுது சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளதுடன் மேலும் நடைபெற்ற சோதனையில் அந்த பெண் பச்சோந்தியை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அதனால் குறித்த பெண்ணை கைது செய்த சுங்கத் துறையினர் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recent News