Friday, November 15, 2024
HomeLatest Newsநீர்வீழ்ச்சியின் விளிம்பில் படுத்திருக்கும் பெண்! வைரலாகும் காணொளி

நீர்வீழ்ச்சியின் விளிம்பில் படுத்திருக்கும் பெண்! வைரலாகும் காணொளி

உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான விக்டோரியா நீர் வீழ்ச்சியின் விளிம்பில் பெண் ஒருவர் சாய்ந்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆப்பிரிக்க கண்டத்தின் நான்காவது பெரிய நதியான ஜம்பேசி (Zambezi) நதியிலுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி ஜிம்பாப்வே, ஜாம்பியா நாடுகளின் எல்லையில் 1.7 கிலோமீட்டர் அகலத்துக்கு, 108 மீட்டர் உயரத்துக்கு அமைந்துள்ளது.

1855ம் ஆண்டில் டேவிட் லிவிங்ஸ்டன் கண்டுபிடித்த்த இந்த நீர் வீழ்ச்சிக்கு இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் நினைவாக விக்டோரியா நீர் வீழ்ச்சி என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த அருவிவின் மேலே நிலவின் ஒளியில் வானவில் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தண்ணீர் சாரலால் ஏற்படும் இந்த வானவில் பிரமிக்கும் வகையில் தோன்றுகின்றது.

மேலும் இந்த நதி ஜாம்பியா, அங்கோலா, நமீபியா,போட்ஸ்வானா, ஜிம்பாப்வே மற்றும் மொசாம்பிக்யூ ஆகிய 6 நாடுகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றது.

உலகிலேயே அதிக அகலமான அதாவது 5577 அடியும், 262-304 அடி உயரத்திலிருந்தும் விழும் இதனைக் காண சுற்றுலா பயணிகள் வந்து கண்டு கழிக்கின்றனர்.

அதிலும் பெண் சுற்றுலா பயணி ஒருவர், அருவியின் உச்சியில் இருந்தபடி காணொளி வெளியிட்டுள்ளது லைக்ஸை குவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றாலும், சிலர் இது போன்ற அபாயகரமான செயல்களை செய்வது ஆபத்தானது என்றும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News