Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsகாதலன் பிரிவால் வாடிய மனைவி..!காதலனுடனே வழியனுப்பி வைத்த புதுமாப்பிள்ளை..!

காதலன் பிரிவால் வாடிய மனைவி..!காதலனுடனே வழியனுப்பி வைத்த புதுமாப்பிள்ளை..!

கணவர் ஒருவர் திருமணமான 20 நாட்களில் தனது மனைவியை அவரது காதலனிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்குட்பட்ட மனாட்டு பகுதியை சேர்ந்த சனோஜ்குமார் சிங் என்பவரிற்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற இளம் பெண்ணிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, புதுமண தம்பதிகள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு முன்னதாகவே பிரியங்கா குமாரி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஜிதேந்திர விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலை அறிந்த பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன் பிரியங்கா குமாரியை சனோஜ்குமாருக்கு மணம் முடித்து வைத்துள்ளனர்.

திருமணம் செய்த பிரியங்கா குமாரியோ தனது காதலன் ஜிதேந்திராவை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளதுடன், காதலனுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியும் வந்துள்ளார்.

இறுதியில் காதலர் இருவரும் வீட்டை விட்டு ஓடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட பிரியங்கா குமரியின் கணவர் மனைவியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது மனைவியை முழு விருப்புடன் காதலனுடன் அனுப்பியும் வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி மிகவும் வைரலாகி வருகின்றது.

Recent News