Tuesday, December 24, 2024
HomeLatest Newsகணவரை பெண்களுக்கு வாடகைக்கு விடும் மனைவி! சமூக வலைதளத்தில் விளம்பரம்

கணவரை பெண்களுக்கு வாடகைக்கு விடும் மனைவி! சமூக வலைதளத்தில் விளம்பரம்

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை மற்ற பெண்களுக்கு வாடகை விட முடிவு செய்துள்ளார்.

லாரா யங் என்ற, மூன்று குழந்தைகளின் தாய்க்கு தான், சமீபத்தில் ஒரு யோசனை தோன்றியுள்ளது.

அதாவது, வீட்டில் இருக்கும் தன் கணவர் ஜேம்ஸை மற்ற பெண்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதுதான் அந்த யோசனை.

உடனே உங்கள் கற்பனையை பலவிதமாக விரிய விடாதீர்கள். நீங்கள் நினைக்கும்படியான வேலையில்லை இது. ட்விஸ்ட்டே இங்கேதான் இருக்கிறது.

மற்ற பெண்களுக்கு வேலை செய்வதற்காகத் தன் கணவரை வாடகைக்கு விடுகிறார் இவர். தன் கணவருக்கு இருக்கும் திறமைகளைப் பட்டியலிட்டு ஒரு வலைதள பக்கத்தைத் தொடங்கி, சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.

அதாவது, லாராவின் இரு குழந்தைகளும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உதவுவதற்காக ஜேம்ஸ் தன் வேலையை விட்டார்.

இந்நிலையில் வீட்டை சீராகக் கவனித்துக்கொள்வதோடு, தோட்டத்தையும் அழகாக மாற்றியுள்ளார் ஜேம்ஸ். தங்கள் வீட்டை, படுக்கைகள், சமையலறை, டைனிங் டேபிள் என அழகாக மாற்றியதோடு, தன்னுடைய கலைத்திறமையை ஓவியம், டைல்ஸ் மற்றும் கார்பெட் போடுவது போன்ற விஷயங்களிலும் காட்டியுள்ளார்.

எனவே, “கணவரின் இந்தத் திறமையை, தொழிலாக மாற்ற நினைத்தே விளம்பரம் செய்தேன்.

ஆனால் சிலர், வேறொரு காரணத்துக்காக இப்படிச் செய்கிறேன் எனத் தவறாகக் கருதினர்.

வாழ்வின் மிக மோசமான, நெருக்கடி நேரத்தில்கூட நான் இப்படி தவறாகச் சிந்தித்தது இல்லை” என லாரா தெரிவித்துள்ளார்.

Recent News