Tuesday, December 24, 2024
HomeLatest Newsகுழந்தை இல்லாதவர்களின் வாக்குரிமையை கட்டுப்படுத்த வேண்டும்..!எலான் மஸ்க் பரிந்துரை..!

குழந்தை இல்லாதவர்களின் வாக்குரிமையை கட்டுப்படுத்த வேண்டும்..!எலான் மஸ்க் பரிந்துரை..!

குழந்தையில்லாத பெற்றோருக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்தா விடில் ஜனநாயகம் நீண்டகாலம் செயற்பட முடியாது என்பதை டுவிட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ஆமோதித்துள்ளார்.

டுவிட்டர் பயனர் ஒருவரே, குழந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் இவ்வாறு பதிவிட்டுள்ள நிலையில் அதனை ஆமோதிக்கும் விதமாக ஆம் என மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மஸ்க், குழந்தை இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் சிறிய பங்கேவுள்ளதாகவும், மனித நாகரிகம் எதிர்கொள்ளும் அபாயங்களில் மிகப்பெரிய அபாயம் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக 2022 ஆம் ஆண்டு வீடியோ மூலம் ஆல் இன் உச்சி மாநாட்டில் பேசிய அவர், சிலர் குறைவான குழந்தைகளைப் பெற்றால் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைப்பது முட்டாள் தானம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாறாக மனிதர்களின் எண்ணிக்கையை இரட்டித்தாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் என்றும் குறைந்தபட்சம் தற்போது இருக்கும் மனித எண்ணிக்கையையாவது பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த பயங்கரமான உலகத்திற்கு தாம் எப்படி ஒரு குழந்தையை கொண்டு வர முடியும்? என கூறுவோர் உலகம் இதை விட மிகவும் மோசமானதாக இருந்தமையை வரலாற்றைப் படித்தால் புரியும்
என்றும் தெரிவித்துள்ளார்.

பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் ஜப்பான் எனும் நாடும் இல்லாமல் போகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும், எலான் மஸ்க் 3 முறை திருமணம் செய்து கொண்டவர் என்பதும், 9 குழந்தைகளுக்கு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News