சுவிட்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கவிதரன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அந்த நாட்டில், தொழிற்கல்வியை நிறைவு செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
அதில், கவிதரன் தமிழர்களின் பண்பாட்டினை பிரதிபலிக்கும் விதமாக வேட்டி சட்டை அணிந்து சென்றுள்ளார்.
குறித்த இளைஞர் வேட்டி சட்டையுடன் சான்றிதழ் பெற்றமையானது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருவதுடன் பலர் கருத்துக்களை பதிவிடவும் வழிசமைத்துள்ளது.
அதனை தொடர்ந்து, தமிழையும், தமிழர் பண்பாட்டையும் தமிழர் விரும்புவார்கள் ஆயின் அதனை எவராலும் தடுக்க முடியாது என்று சிலர் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.