Sunday, January 5, 2025
HomeLatest Newsஅலரிமாளிகைக்கு முன் உருவாகியது மைனா கோ கம கிராமம்.

அலரிமாளிகைக்கு முன் உருவாகியது மைனா கோ கம கிராமம்.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 17 நாட்களாக தொடர்ச்சியான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பலதரப்பட்ட மக்களும் நேரடியாக பங்கெடுத்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டா கோ கம என்றவாறு பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மைனா கோ கம என பெயரிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent News