Wednesday, December 25, 2024
HomeLatest Newsமீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி..!

மீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(04.05.2023) சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையடைந்துள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 363.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 412.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News