Thursday, January 16, 2025
HomeLatest NewsWorld Newsஇலங்கை அணி வீரர் இருவரது விசாக்களை அமெரிக்க தூதரகம் நிராகரிப்பு !

இலங்கை அணி வீரர் இருவரது விசாக்களை அமெரிக்க தூதரகம் நிராகரிப்பு !

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவுள்ள ரி 20 உலககிண்ண போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின்
இருவரது விசாக்களை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை அணி வீரர் ஒருவரினதும், அணி உதவியாளர் ஒருவரினதும் வீசாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung)சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.இதன்போது இலங்கை அணி வீரர்களை தாம் வரவேற்பதாகவும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி,அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்குச் செல்லும் போது விளையாட்டு இராஜதந்திரத்திற்கு இது ஒரு அருமையான தருணமாக இருக்கும்.அவர்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் திறமை மற்றும் உற்சாகத்தின்மூலம் கவர்வது உறுதி என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Recent News