Thursday, January 23, 2025
HomeLatest Newsஅதிரடியாய் ISIS தீவிரவாதத்தலைவரை சுட்டுக் கொன்ற அமெரிக்கா!

அதிரடியாய் ISIS தீவிரவாதத்தலைவரை சுட்டுக் கொன்ற அமெரிக்கா!

ஒசாமா பின்லேடனைக் ஆஃப்கானிஸ்தானில் கொன்ற பாணியில், சோமாலியாவில் ISIS தீவிரவாதத் தலைவரை சுற்றி வளைத்து கொன்றது அமெரிக்க இராணுவம் 

சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசின் மூத்தத் தலைவரை அமெரிக்க ராணுவம் கொன்றது. ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கிளைக்கும் நிதி உதவி செய்துவந்தார் பிலால் அல்-சூடானி. ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் கிளைகளுக்கு நிதியுதவி அளித்து வந்தவர் அல்ப்சூடானி என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு சோமாலியாவில் உள்ள தனது மலைத் தளத்தில் இருந்து அல்-சூடானி இயங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று, (ஜனவரி 26, வியாழன்) அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் பேரில், சோமாலியாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க இராணுவத் தாக்குதலில், இஸ்லாமிய அரசு குழுவின் குறிப்பிடத்தக்க பிராந்திய தளபதி பிலால் அல்-சூடானி கொல்லப்பட்டார். அல்-சூடானியை கைது செய்யும் முயற்சியில் அமெரிக்கப் படைகள் வடக்கு சோமாலியாவில் உள்ள குகைக்குள் நுழைந்தபோது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்டதாக AFP செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அல் சூடானி கொல்லப்பட்ட இடத்தில், குறைந்தது 10 ஐஎஸ் ஆதரவாளர்கள் இருந்தனர். நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், அமெரிக்கர்கள் யாரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ஜனவரி 25 அன்று, அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவம் வடக்கு சோமாலியாவில் தாக்குதல் நடவடிக்கையை நடத்தியது, அதில், பிலால் அல்-சூடானி உட்பட பல ISIS உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆப்பிரிக்காவில் ISIS தீவிரவாத அமப்பை வளர்ப்பதற்கும், ஆப்கானிஸ்தான் உட்பட உலகளாவிய குழுவின் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கும் அல்-சுடானி பொறுப்பேற்றிருந்தார்” என்று ஆஸ்டின் கூறினார்.

அல்-சூடானி ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்தும் கிளையான இஸ்லாமிய தேசம் கொராசானுக்கும் ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் கிளைகளுக்கு நிதியுதவி அளித்ததவர்.  

“சூடானி சிறப்புத் திறன்கள் கொண்டவர், பணம் வழங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சாமர்த்தியசாலி. அதனால்தான், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான முக்கிய இலக்காக அவர் இருந்ததற்கான காரணம்” என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

அமெரிக்க வீரர்கள் சூடானி பதுங்கியிருந்த நிலப்பரப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு இடத்தில் பல மாதங்களாக ஆபரேஷனுக்கான தயாரிப்புகளில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் மூத்த பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிய பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார் என்று AFP தெரிவித்துள்ளது.

Recent News