Monday, January 13, 2025
HomeLatest Newsசர்வதேச உணவுத்தேவைகளிற்கு அமெரிக்கா 670மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு. 

சர்வதேச உணவுத்தேவைகளிற்கு அமெரிக்கா 670மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு. 

உக்ரைன் ரஷ்யா போரினால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறைகளை சரி செய்ய சர்வதேச அவசர உதவி நிதி ஒதுக்கீட்டில் இருந்து 670மில்லியன் டாலர் பெறுமதியை அமெரிக்கா ஒதுக்கீடு செய்கிறது.

இந்த நிதித்தொகை, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, சூடான், தென் சூடான் மற்றும் யேமென் ஆகிய நாடுகளிற்கு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது. இந்த தொகையில் 282 மில்லியன் டாலர் தொகை பில் எமேர்சன் மனிதாபிமான நிதி உதவி அமைப்பில் இருந்து வழங்கப்படவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நிதி உதவிகள் அமைப்பின் தலைவர் சமந்தா பவர் குறிப்பிடும் போது, உக்ரைன் போரினால் உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.

அடுத்து உக்ரைனிற்கான விசேட நிதி ஒதுக்கீடு மசோதா ஒன்று வியாழக்கிழமை பாராளுமன்ற ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

Recent News