பெண் ஒருவரின் உள்ளாடைகளை ஆறு மாத காலங்களாக களவாடிய நபரை மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குஜராத் அகமதாபாத்தில் தண்டுகா என்ற தாலுகாவில் உள்ள பச்சம் என்ற கிராமத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவர் தினமும் சலவை செய்து காய விடும் தொடர்ந்தும் ஆறு மாத காலங்களாக இரவு வேளைகளில் காணாமல் போய்யுள்ளது.
இதனால், விரக்தியடைந்த குறித்த பெண் ஆடைகள் எவ்வாறு மாயமாகின்றன என்பதை கண்டறிவதற்காக ரகசியமாக ஒரு இடத்தில் செல்போனை வைத்து படம்பிடித்துள்ளார்.
அதில், அயல் வீட்டில் வசிக்கும் 31 வயதான நபர் ஒருவர் சிக்கியுள்ளார். அந்த நபர் காயப்போட்டிருந்த சில ஆடைகளை திருடி சென்றுள்ளார்.
இதனால், கோபமடைந்த பெண் அந்த நபரின் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் உள்ளாடைகள் குவியலாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதையடுத்து அந்த பெண் , அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஒரு கட்டத்தில் அந்த நபர் குறித்த பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் கூச்சலிட்டு அயலவர்கள் அழைத்துள்ளார். அவரின் அலறல் கேட்டு ங்கு விரைந்த உறவினர்கலும், அயலவர்களும் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதனால், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய கலவரமாக மாறிய நிலையில் அதில் 10 ற்கும் மேற்பட்டோர் நபர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் அதனுடன் தொடர்புபுடைய 20 பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.