Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஐநா பாதுகாப்பு கவுன்சிலின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வாக்களித்த நாடுகளின் விபரத்தை வெளியிட்டது ஐநா..!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வாக்களித்த நாடுகளின் விபரத்தை வெளியிட்டது ஐநா..!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வாக்களித்த நாடுகளின் விபரத்தை ஐநா தற்போது வெளியிட்டுள்ளது . கடந்த வாரம் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு எந்த நாடுகள் சார்பாகவும் எந்த எந்த நாடுகள் எதிராகவும் வாக்களித்தார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது . மேற்படி குறித்த தீர்மானத்திற்கு அல்ஜீரியா , வங்கதேசம், பெல்ஜியம், பிரேசில், புருண்டி, சிலி, சீனா,ஐவரிகோஸ்ட், கியூபா,எரித்திரியா, பின்லாந்து, காம்பியா, கானா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா,கஜகஸ்தான், குவைத், கிர்கிஸ்தான், லக்சம்பர்க், மலேசியா, மாலத்தீவு, மொராக்கோ,கத்தார், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,
வியட்நாம் போன்ற நாடுகள் சம்மதம் தெரிவித்தன.

அர்ஜென்டினா, பல்கேரியா, ஜெர்மனி, மலாவி, பராகுவே போன்ற நாடுகள் குறித்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை .மேலும் பலநாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகின . அவற்றுள் அமெரிக்காவின் விலகல் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . அமெரிக்கா மட்டும்மல்லாது அல்பேனியா ,பல்கேரியா, கேமரூன்,டொமினிகன் குடியரசு, பிரான்ஸ், ஜார்ஜியா, இந்தியா, ஜப்பான், லிதுவேனியா, மாண்டினீக்ரோ, நெதர்லாந்து,ருமேனியாபோன்ற நாடுகளும் வாக்கெடுப்பில் இருந்து விலக்கியமை குறிப்பிடத்தக்கது.

Recent News