ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவின் ஆயுதப் படைகளை உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 518 குழந்தைகள் அங்கவீனர்கள் ஆகியதாகவும் மற்றும் மருத்துவமனைகள் மீது 480 தாக்குதல்களை நடத்தபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, தொண்ணூற்றொரு குழந்தைகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மட்டுமல்லாது, உக்ரைனின் தாக்குதலால் 80 குழந்தைகளை கொல்லப்பட்டுள்ளதுடன், 175 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவற்றுடன் 212 மருத்துவமனைகள் மீதுM தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆயினும், குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.