Thursday, December 26, 2024
HomeLatest Newsபாணுக்கு வந்த சோதனையும் மக்கள் அடைந்த வேதனையும்!

பாணுக்கு வந்த சோதனையும் மக்கள் அடைந்த வேதனையும்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக யாழ் . மாவட்டத்தில் பேக்கரி பொருள்களைக் கொண்டு சென்று விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கா.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நகர்ப்புறங்களில் உள்ள பல பேக்கறிகள் டீசல் இன்றி மூடப்பட்டுள்ளன .அத்துடன் உற்பத்தியை குறைத்துள்ளன .

கிராம பகுதிகளில் மண் போரனைகளில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களையும் விநியோகம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது .

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பேக்கர் உரிமையாளர்களால் மக்களின் நலன்கருதி இயன்ற அளவு பாண் உற்பத்தியை மேற்கொள்கின்றனர் .

பேக்கரி உற்பத்திப் பொருள்களின் பாவனையாளர்கள் தமது பிரதேசத்திலுள்ள பேக்கர்களில் நேரடியாகச் சென்று பாண் உற்பத்திப் பொருள்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

எமது பேக்கரிகளுக்குத் தேவை யான டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்படும் வரை இந்தநிலை தொடரும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News