Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsதொடரும் சோகம்..! பிரபல நடிகர் சரத்பாபு திடீர் மரணம்..! கண்ணீரில் திரையுலகம்..!

தொடரும் சோகம்..! பிரபல நடிகர் சரத்பாபு திடீர் மரணம்..! கண்ணீரில் திரையுலகம்..!

பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(22) மருத்துவமனையில் காலமானார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று உயிரிழந்தார்.

நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சரத்பாபுவின் இறுதிச் சடங்கு சென்னை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சரத்பாபுவின் மறைவுக்கு பல்வேறு திரையுலகத்தினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent News