Sunday, February 23, 2025
HomeLatest Newsஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயம்!

ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயம்!

போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த கோட்டை ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றிய பின்னர் அங்கு ஏராளமானோர் பயணித்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

மேல் நோக்கி செல்லும் மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி உடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, அந்த பகுதிக்குள் நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களினாலேயே தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாளிகையை ஆய்வு செய்த தொல்பொருள் திணைக்களம், பல தொல்பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட இந்த மாளிகையை நேற்று அதிகாரிகளிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News