Wednesday, December 25, 2024
HomeLatest News9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு சற்றுமுன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்!

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு சற்றுமுன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்றுமுன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது.

குறிப்பாக மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக நாடாளுமன்ற முன்றலில் முப்படையினரும் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை அளித்திருந்தனர்.

அதேவேளை ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது ரணில் விக்கிரமசிங்க தேசிய கொடியினை ஏற்றியிருந்தார்.


அத்துடன் முற்பகல் 9.30 மணியிலிருந்து விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெற்றிருந்ததுடன் முதலாவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை இடம்பெற்றிருந்தது.


அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும், அதன் பின்னர் பிரதமர் தினேஸ் குணவர்தனவின் வருகையும்,
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையும் இடம்பெற்றது.


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும்,
நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் காத்திருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றிருந்தனர்.

சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வருகையும் இடம்பெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான படிக்கட்டுகளில் வரவேற்றதுடன் சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டிடத்திற்கு சேர்ஜென்ட், பிரதி சார்ஜென்ட் மற்றும் உதவி சேர்ஜன்ட் ஆகியோருடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Recent News