Monday, January 27, 2025
HomeLatest Newsரயில் நிலையத்தில் நடந்த கோர சம்பவம்! நெட்டிசன்களை உறைய வைத்த காட்சி

ரயில் நிலையத்தில் நடந்த கோர சம்பவம்! நெட்டிசன்களை உறைய வைத்த காட்சி

ரயில் நிலையத்திற்கு முன்பு நின்று உரையாடிக் கொண்டிருக்கும் போது ரயில் நிலைய பணியாளர் மீது மின்னழுத்த கம்பி விழுந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் எம்மை வியக்க வைக்கக்கூடிய வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது. இதனை பார்ப்பதற்கும், வைரலாக்குவதற்கும் ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் நபரொருவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.

இதன்போது ரயில் நிலையத்திலுள்ள மின்னழுத்த கம்பி அறுந்து பணியாளர் மீது விழுந்துள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு ரயில் பாதையினுள் விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்குள்ளவர்கள் நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில், பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த காட்சி ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சியை Ananth Rupanagudi என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதளிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Recent News