கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் அது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, கனடிய சுற்றாடல் திணைக்களம் அதிகளவான வெப்பநிலை குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், றொரன்டோ மற்றும் ஹமில்டன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகளவில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு அதிகளவான வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறாக, வெப்பநிலையானது 20 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் உயர்வடையக்கூடிய சாத்தியம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே, அதிகளவான வெப்பநிலையை நிலவும் காலப்பகுதியில் அதிகளவான நீர் அருந்துமாறு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.