Thursday, January 23, 2025
HomeLatest Newsகளவாக பிள்ளைகளை அழைத்து சென்ற சுவிஸ் பெண்..!வெளிநாட்டில் தலைமறைவு..!!மடக்கி பிடித்த பொலிசார்…!

களவாக பிள்ளைகளை அழைத்து சென்ற சுவிஸ் பெண்..!வெளிநாட்டில் தலைமறைவு..!!மடக்கி பிடித்த பொலிசார்…!

தனது பிள்ளைகளை கணவருக்கு தெரியாது வெளிநாடொன்றிற்கு அழைத்து சென்ற தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் சுவிட்சர்லாந்திலுள்ள பைல் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த நிலையில் கணவருக்குத் தெரியாது தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வெளிநாடு ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பிள்ளைகளிற்கு என்ன ஆனது? உயிருடன் உள்ளார்களா? எங்குள்ளார்? என எந்த தகவலும் தெரியாத நிலையில் ஓராண்டாக அந்த தந்தை தவித்து வந்துள்ளார்.

இவ்வாறான சூழலிலே, அந்த தாய் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், அந்த நாட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுவிட்சர்லாந்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பொழுது, அவர் துனிசியாவில் ஓராண்டாக சட்ட விரோதமாக தலைமறைவாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுவிட்சர்லாந்தில் அந்த தாயார் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

Recent News