Thursday, January 23, 2025
HomeLatest Newsஅடுத்த ஐந்தாண்டுகளில் சுட்டெரிக்கவுள்ள வெயில்..! ஐ.நா எச்சரிக்கை..!

அடுத்த ஐந்தாண்டுகளில் சுட்டெரிக்கவுள்ள வெயில்..! ஐ.நா எச்சரிக்கை..!

2023 – 2027 வரையிலான அடுத்த ஐந்தாண்டுகள் அல்லது ஐந்தண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டு, உலக வெப்பநிலை அதிகரிப்பதற்கு 98 சதவீதம் வாய்ப்புள்ளதாக என ஐ.நா வின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா வின் உலக வானிலை அமைப்பின் அறிக்கையில்,

உலகளவில், 2015 – 2022 வரையிலான, எட்டு ஆண்டுகள் மிகவும், வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளதுடன், அதில் 2016 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது.

அத்துடன், காலநிலை மாற்றம் தீவிரமடைவது, பசிபிக் பெருங்கடலில், இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். ‘எல்-நினோ’ நிகழ்வு, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவற்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம், ஓர் ஆண்டோ அல்லது ஐந்து ஆண்டுகாலமுமோ, அதிக வெப்பம் பதிவாவதற்கு 98 சதவீதம் வாய்ப்புள்ளது.

எனினும் இது, 2030 ஆம் ஆண்டுக்குள் உலக சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுகோலுக்குள் கட்டுப்படுத்துவதற்கு போடப்பட்ட, 2015 பாரிஸ் உடன்படிக்கையை மீறும் வகையில் இருக்கும் எனக்கூறமுடியாது.

ஏற்கனவே, நடப்பாண்டு, எல்-நினோ நிகழ்வு, ஜூலை மாதம் உருவாக, 60 சதவீத வாய்ப்புகளும், செப்டம்பரில் உருவாக, 80 சதவீத வாய்ப்புகளும் இருக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்நிகழ்வால் அடுத்த ஆண்டு, உலக வெப்பநிலை அதி்கரிக்கும்.

இதனால், சர்வதேச அளவில் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படும். ஆகவே, அதனை எதிர்கொள்ள தயாராகுதல் வேண்டும்.

கனடாவின் அலாஸ்கா, தென்னாப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளை தவிர, அனைத்து பகுதிகளிலும், இந்தாண்டு, 1991 – 2020 ஆம் ஆண்டு வரை இருந்த, சராசரி வெப்பநிலையை விட அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Recent News