Tuesday, January 21, 2025
HomeLatest Newsநாட்டின் நெருக்கடி நிலை; சபாநாயகருடன் அமெரிக்க தூதர் திடீர் சந்திப்பு!

நாட்டின் நெருக்கடி நிலை; சபாநாயகருடன் அமெரிக்க தூதர் திடீர் சந்திப்பு!

நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை இன்றையதினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் முக்கிய பங்கு பற்றி பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த அபேவர்தனவுடன் நல்ல விவாதம். இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான முயற்சிகள் மக்களின் அவசர கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அரசியல் சீர்திருத்தங்களுடன் கைகோர்த்து மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Recent News