பிரான்ஸ் முழுவதும் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சி வகைகள் மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் பின்னர் பெருமளவு கோழி இறைச்சிகளை மீளக்கோரியுள்ளது.
Leader Price என்ற சுப்பர் மார்க்கெட்டின் கோழி இறைச்சி தயாரிப்புக்கள் உட்கொள்வதற்கு தகுதியற்றதென சுகாதார அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.
Carrefour, அல்டி, லிட்ல், Leclerc, Systeme U, Auchan, Casino, Intermarché, Monoprix , Franprix, உள்ளிட்ட சுப்பர் மார்க்கெட்களில் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சிகள் கொள்வனவு செய்திருந்தால் உட்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த கோழி இறைச்சியில் லிஸ்டீரியா பாக்டீரியா அபாயம் அதிகம் உள்ளதென கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோழி இறைச்சி கடந்த மாதம் 19ஆம் திகதி விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் காலாவதி திகதி நவம்பர் மாதம் 7ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இடங்களில் ஒக்டோபர் மாதம் 17 மற்றும் 20ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. rappel.conso.gouv.fr என்ற அரசாங்கத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த கோழி இறைச்சியை கொள்வனவு செய்திருந்தால் அதனை உடனடியாக அழித்து விடுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி இல்லை என்றால் அதனை கொள்வனவு செய்த இடத்தில் ஒப்படைத்து பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.