Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு (CPC) இந்த ஆண்டு மார்ச் முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமற்ற மசகு எண்ணெய் கொள்வனவு மற்றும் தவறான விலை நிர்ணய முறை காரணமாகவே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பகுப்பாய்வின் படி, இழந்த குறித்த மொத்தத் தொகைக்கு இரண்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிகளை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.

தகவல்களின்படி, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனம் மற்றும் ஒரு, எரிபொருள் விநியோகஸ்தர் நிறுவனத்தை நிரந்தரமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

இதேவேளை குறித்த விநியோக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமற்ற முகவரும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபான ரகசிய கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் வேறு எந்த விநியோகஸ்தர்களும் அழைக்கப்படவில்லை.

மற்ற விநியோகஸ்தர்களின் எரிபொருள் கப்பல்கள், துறைமுகத்திற்கு வெளியே தங்கள் சரக்குகளை வெளியேற்ற காத்திருக்கும் போது, ​​இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் கப்பல்களுக்கு, முழுமையாக பணம் செலுத்தப்பட்டு தங்கள் சரக்குகளை வெளியேற்றப்பட்டுள்ளன.

ஜெட் ஏ1 எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான பிரத்தியேக உரிமையும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, அதேசமயம் வேறு எந்த வழங்குநரும் ஜெட் ஏ1 ஐ மேற்கோள் காட்டவோ அல்லது கொண்டு வரவோ அனுமதிக்கப்படவில்லை.

Recent News