இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது விடை காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் தங்கியிருந்து மருத்துவ படிப்பை முடிக்கவே மாணவன் ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் அறுபது இலட்சம் ரூபாய் செலவழிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவிகளே அதிகம் என தெரிவித்தார்.
எனவே எவ்வாறான அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினை பாதிக்கும் எனவும் இந்த பிரச்சினைக்கான பதிலை நாம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.