Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld NewsMasterChef Australia போட்டியில் மீண்டும் களமிறங்கிய இலங்கை யுவதி !!!

MasterChef Australia போட்டியில் மீண்டும் களமிறங்கிய இலங்கை யுவதி !!!

MasterChef Australia போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை (Sri Lnka) வீராங்கனை சாவிந்திரி பெரேராவுக்கு (Savindri Perera) நடுவர்களால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மீண்டும் 2024 ஆம் ஆண்டு போட்டித் தொடரில் இணைவதற்கான வாய்ப்பைப் பெற்ற எட்டு போட்டியாளர்களில் சாவிந்திரி பெரேராவும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடுவர்கள் அவர் தயாரித்த இலங்கை உணவுகளை நேசித்ததால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் மற்றும் இலங்கை யுவதி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்ததாகவும் நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.MasterChef Australia நடுவர்கள் சாவிந்திரி முந்தைய போட்டிகளில் அவர் தயாரித்த சுவையான இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தனது 18 ஃஅவது வயதில் அடிலெய்டுக்கு வரும் வரை இலங்கையின் கிராமிய சமையல் முறையும் மற்றும் காட்சிப்படுத்தலும் பாராட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் வரவிருக்கும் சுற்றுகளுக்கு தயாராகி வருகிறார்.
இந்த சுற்றுக்கு அவர் இலங்கை மதிய உணவை வழங்கியதுடன் அதில் பன்றி இறைச்சி கறி, மிளகாய் இறால்,உருளைக்கிழங்கு பால் குழம்பு, வெங்காய இலை சம்பல் மற்றும் கத்திரிக்காய் உள்ளிட்ட பல வகையான உணவுகளை வழங்கியிருந்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், MasterChef போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.மேலும், இலங்கை உணவின் அனுபவத்தைப் பெற்றதற்காக போட்டியின் நடுவர்களும் அவரை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News