தென் சீன கடலில் சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த கடற்பகுதியில் அமைந்துள்ள,பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் தாமஸ் ஷோல் தீவிற்கு உணவு, நீர் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றுள்ளது.
இந்த படகை சீன இராணுவ கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து சீன தூதர் ஹுவாங் சிலியனை அழைத்து தூதரக ரீதியிலான தனது எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.