Saturday, November 23, 2024
HomeLatest NewsIndia Newsஅம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்..!நெகிழ வைக்கும் பாச போராட்டம் ..!

அம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்..!நெகிழ வைக்கும் பாச போராட்டம் ..!

மகன் ஒருவர் இறந்து போன தன்து அம்மாவின் நினைவாக தாஜ்மஹால் வடிவில் நினைவு ஆலயம் கட்டிய சம்பவம் உலக மக்களையே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் அப்துல் காதர் மற்றும் ஜெய்லானி பீவி தம்பதியர் வாழ்கை நடத்த வந்துள்ளனர்.

இவர்கள் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்த நிலையில்,எதிர்பாராத விதமாக கணவர் காதர் உயிரிழக்க பிள்ளைகளை வளர்ப்பதற்காக ஜெய்லானி பீவி கடையை எடுத்து நடத்தியுள்ளார்.

இந்நிலையில் மகன் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ படிப்பை முடித்து விட்டு சென்னையில் தொழிலதிபராக இருப்பதுடன் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தமையால் அம்ருதீன் அம்மாவின் அனுமதியுடனே எந்த காரியம் என்றாலும் செய்யும் பழக்கம் உடையவராக காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த 2020ம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலம் குன்றி உயிரிழந்துள்ளார்.

தாயின் பிரிவால் வேதனை அடையும் அம்ருதீன், அவருக்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு ஆலயம் கட்ட திட்டமிட்டு திருச்சியிலுள்ள கட்டட வடிவமைப்பாளரை வரவழைத்துள்ளார்.

அதன் பின்னர், ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்றோர் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலயத்தையும் கட்டி அதற்குள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதியையும் அமைத்துள்ளனர்.

குறித்த நினைவு இல்லம் கடந்த 2 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மதரஸா பள்ளியும் அங்கு இயங்கி வருவதுடன், தொழுகை செய்ய கூடிய வசதியும் காணப்படுகின்றது.

அவை மட்டுமன்றி, 10 மாணவர்கள் அந்த நினைவு ஆலயத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

மேலும், ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் இறந்த காரணத்தினால் ஒவ்வொரு அமாவாசையும் 1000 நபர்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News