கெஸ்பேவ மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் ஒருவரின் மகன் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறித்த நபரை தேடி வருகின்றனர்.
குறிப்பாக, தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நேற்று இரவு குடிபோதையில் வந்த குறித்த மாநகர சபை உறுப்பினரின் மகன் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.