Friday, January 24, 2025

எதியோப்பாவில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலை!

எத்தியோப்பியாவில் ஊட்டத்சத்து குறைபாட்டினால் இறக்கும் தரவாயில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் குழந்தைகள் காணப்படுவதாகவும், மேலும் பல குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் போஷாக்கு உணவின்மையால் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆபிரிக்கக் கண்டம் தொடர் உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப்பட்டு வரும் நிலையில், கடந்த 5 மழை காலநிலைகளும் முற்றாக தடையாகியுள்ள நிலையில் மழையின்றிய வரட்சி நிலை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வன விலங்குகள் குடிநீரின்றி மரிக்கும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐநா வின் அறிக்கைப்படி 1 மில்லியனுக்கு மேற்பட்ட குழந்தைகள் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் உணவு பற்றாக்குறையினால் மரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்களில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்பு இது என தெரிவிக்கப்படுகின்றது.

Latest Videos