Thursday, January 23, 2025
HomeLatest Newsவாசனை திரவியத்தால் மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை!

வாசனை திரவியத்தால் மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை!

மதவாச்சி யக்கவேவ கல்லூரியில் 07ஆம் தரத்தில் கல்வி கற்கும் 05 மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 மாணவிகளும் காய்ச்சல், வாந்தி, தலைவலி, மற்றும் கடும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகுப்பில் கற்கும் மாணவி ஒருவர் கொண்டு வந்த நறுமண போத்தலை பூசியதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

Recent News