Tuesday, December 24, 2024
HomeLatest Newsஜெர்மனியில் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!வீதியில் நேர்ந்த கதி..!

ஜெர்மனியில் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!வீதியில் நேர்ந்த கதி..!

ஜெர்மனியில் சிறுமி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக்சன் மாநிலத்தில் முக்காடு அணிந்து சென்ற சிறுமிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முக்காடு அணிந்து செல்லும் பெண்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் அண்மை காலத்தில் ஜெர்மனியின் சக்சன் மாநிலத்தில் முக்காடு அணிந்து சென்ற சிறுமி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியை பெண்ணெருவர் தாக்கியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

அதாவது முக்காடு அணிந்த நிலையில் சிறுமியானவர் தனது வீட்டுக்கு சென்று இருந்த பொழுது ஒரு பெண் குறித்த சிறுமியின் முக்காடை கிழித்து எறிந்த நிலையில் தாக்கியதாகவும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பெண்ணானவர் 40 தொடக்கம் 50 வயதுடையவர் என்றும் 1.75 மீற்றர் உயரத்தை கொண்டவராகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

மேலும் தாக்கப்பட்ட சிறுமி தொடர்பில் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்பொழுது சாடூச் என்று சொல்லப்படுகின்ற ஜெர்மனியின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பானது இது சம்பந்தமான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

Recent News