Thursday, January 23, 2025
HomeLatest Newsஆட்டை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

ஆட்டை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

ஆடு ஒன்றை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. இச்சம்பவம் கடந்த மே மாதம் இடம்பெற்றுள்ள போதும், இன்று திங்கட்கிழமையே குறித்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது.

Chainteaux நகரைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் கடந்த மே மாதம் கைது செய்து செய்யப்பட்டார்.

குறித்த நபர் அங்குள்ள பண்ணை ஒன்றுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, அங்கிருந்த ஆடு ஒன்றை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.

பின்னர், குறித்த ஆட்டினை திருடிக்கொண்டு மகிழுந்துக்குள் ஏற்றி அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் குறித்த ஆட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

குறித்த ஆடு, தனது உரிமையாளரை கண்டறிந்து பண்ணையை வந்தடைந்துள்ளது. குறித்த ஆட்டில் உரிமையாளருக்கு சந்தேகம் எழ, காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த ஆடு பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் முடிவில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் என அறிய முடிகிறது.

Recent News