வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் நிறைவுக்கு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமிக்ரோனின் துணை வகையால் இயக்கப்படும் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேல்ஸ் அரசாங்கம் அதன் மீதமுள்ள கொவிட் விதிகளில் சிலவற்றை நடைமுறையில் வைத்திருக்கும். ஆனால் அனைத்தையும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் , சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் மட்டுமே முகக் கவசங்கள் சட்டப்பூர்வமாக தேவைப்படும்.
வேல்ஸின் அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளும் மார்ச் 28ஆம் திகதி காலாவதியாகியிருந்தன. ஆனாலும் , தொற்று அதிகரிப்பு காரணமாக, இந்த வார தொடக்கத்தில் அமைச்சர்கள் தாங்கள் மீண்டும் யோசிப்பதாக தெரிவித்திருந்தனர்..