Thursday, January 23, 2025
HomeLatest Newsநெடுஞ்சாலையில் உருண்டு வந்த பாறை…!சுக்குநூறாகிய கார்கள்..!இருவருக்கு நேர்ந்த துயர்..!

நெடுஞ்சாலையில் உருண்டு வந்த பாறை…!சுக்குநூறாகிய கார்கள்..!இருவருக்கு நேர்ந்த துயர்..!

நிலச்சரிவு காரணமாக உருண்டு வந்த பாறையில் சிக்கி 3 கார்கள் நசுங்கியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம், நாகாலாந்தின் பஹலா பஹார் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

திமாபூர் மற்றும் கோஹிமா இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறை உருண்டு வந்துள்ளது.

அந்த பாறையில் சிக்கிய ஒரு கார் முழுவதுமாக நசுங்கியுள்ளதுடன், இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த விபத்தினால், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் ஏனைய உதவிகளை செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News